சனி, 4 ஆகஸ்ட், 2018

அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில் (கந்தக்கோட்டம்)

உற்சவர்                   :   முத்துக்குமாரர்
அம்மன்/தாயார்      :   வள்ளி, தெய்வானை
தல விருட்சம்         :  மகிழம்
தீர்த்தம்                     :   சரவணப் பொய்கை
ஆகமம்/பூஜை         :   குமார தந்திரம்
பழமை                       :  500 - 1000 வருடங்களுக்கு முன்


தல வரலாறு


இப்பகுதியில் வசித்த சிவாச்சாரியார் ஒருவர் அருகிலுள்ள திருப்போரூர் அருகில் உள்ள திருப்போரூர் தலத்திற்கு சென்றுவிட்டு ஊருக்கு உரும்பிக் கொண்டிருந்தார். அவருடன் சில ஆச்சார்யார்களும் வந்தனர். வழியில் கனத்த மழைபெய்து, வெள்ளம் பெருக்கெடுத்ததால் அவர்களால் ஊருக்கு திரும்ப முடியவில்லை.  எனவே, அங்கேயே ஓர் மடத்தில் தங்கினர். அன்றிரவில் சிவாச்சாரியாரின் கனவில் காட்சிதந்த முருகன், தான் அருகிலுள்ள புற்றில் குடிகொண்டிருப்பதாகவும், தனக்கு கோயில் கட்டும்படியும் கூறியருளினார். கண்விழித்த சிவாச்சாரியார் அங்கிருந்த புற்றில் முருகன் சிலை வடிவில் இருந்ததைக் கண்டார். அச்சிலையை எடுத்துக்கொண்டு, ஊருக்கு புறப்பட்டார். வழியில் ஓரிடத்தில் சிலையை வைத்துவிட்டு சிறிதுநேரம் ஓய்வெடுத்தனர். பின் சிலையை எடுக்க முயன்றபோது முடியவில்லை. எனவே, அந்த இடத்திலேயே கோயில் கட்டினர்.


தல சிறப்பு: 


உற்சவர் முத்துக்குமாரர் தனிக்கொடிமரத்துடன் உள்ளார். இவர் தனது முகத்தில் புள்ளிகளுடன் மிகவும் அழகு பொருந்தியவராக காட்சி தருகிறார். விசேஷ காலங்களில் இவருக்கே பிரதான பூஜை நடத்தப்படுகிறது. இங்குள்ள விநாயகர் குளக்கரை விநாயகர். சித்திபுத்தி விநாயகர் அமர்ந்த கோலத்தில் தனிச்சன்னதியில் உள்ளார். சித்தியும், புத்தியும் ஒருகாலை மடக்கி, மற்றொரு காலை தொங்கவிட்ட கோலத்தில் காட்சி தருகின்றனர். சரவணப்பொய்கையின் கரையிலும் ஒரு விநாயகர் இருக்கிறார். இவருக்கு வலப்புறத்தில் லட்சுமிதேவியும், இடப்புறத்தில் சரஸ்வதி தேவியும் உள்ளனர். தீர்த்தத்தை நம் மீது தெளித்துக்கொண்டு ஒரே சமயத்தில் இம்மூவரையும் வணங்கினால் கல்வி சிறக்கும். செல்வம் பெருகும் ஞானம் கிடைக்கும் என்கின்றனர்.


தல பெருமை:


சுவாமி இவ்விடத்தில் தானாக விரும்பி நின்றவர் என்பதால் பீடம் இல்லாமல் தனித்து, தரையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அளவில் மிகவும் மூர்த்தியாக உள்ள இவருக்கு இருபுறமும் வள்ளி, தெய்வானை ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர். மூலவருக்கு நேரே வாயில் இல்லை. அவருக்கும், கொடிமரத்திற்கும் இடையே துணைகளுடனான சுவர் மட்டும் உள்ளது. ராஜகோபுரமும், பிரதான வாயிலும் வடக்குப்பகுதியில் உள்ளது.


பாடியவர்கள்:


சிதம்பரசாமி, பாம்பன் குமரகுருபரதாச சுவாமிகள், ராமலிங்க சுவாமிகள்.
பொதுத்தகவல்:
இங்குள்ள கோபுரம் ஐந்து நிலைகளை கொண்டது. இங்கு சர்க்கரைப்பொங்கல் நைவேத்தியம் செய்யப்படுகிறது.


சிறப்பம்சம்:


உற்சவர் முத்துக்குமாரர் தனிக்கொடிமரத்துடன் உள்ளார். இவர் தனது முகத்தில் புள்ளிகளுடன் மிகவும் அழகு பொருந்தியவராக காட்சி தருகிறார்.


திருவிழா:


தையில் 18 நாள் பிரதான திருவிழா, கந்தசஷ்டி, வைகாசி வசந்த உற்சவம், ஆடிக்கிருத்திகை, பங்குனி உத்திரம்.


நேர்த்திக்கடன்:


பிணிகள், தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் பசுவிற்கு பழங்கள், கீரைகள் கொடுத்து வணங்கினால் அவை நீங்கும், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்ற அடிப்படையில், இங்கு கோமாதா பூஜை தினமும் நடத்தப்படுகிறது. தோல் நோய், மற்றும் கட்டிகளால் பாதிக்கப்பட்டவர்கள் சரவணபொய்கை தீர்த்தத்தில் வெல்லம் கரைக்கின்றனர். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் விசேஷ பன்னீர் அபிஷேகம் செய்யப்படுகிறது. குடும்பத்தில் பிரச்சனை உள்ளவர்கள் இங்குள்ள சித்தபுத்தி  விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபட்டால் அது தீரும் என நம்புகின்றனர்.


திறக்கும் நேரம்:


காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.


கோயிலை எப்படி அடையலாம்:


சென்னை பாரிமுனை அருகிலுள்ள கந்தகோட்டத்தில் கோயில் அமைந்துள்ளது. சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து ஐந்து நிமிட நடையில் கோயிலை அடையலாம்.
ரயில் நிலையம் - சென்னை சென்ட்ரல்
தங்கும் வசதி: சென்னை


தொடர்பு முகவரி: 


அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில்,
கந்தகோட்டம் - 600 003.
சென்ட்ரல் ரயில்நிலையம் அருகில், சென்னை.
போன்: +91-44-25352192
மின்னஞ்சல்: smdevasthanam@gmail.com


திங்கள், 23 ஜூலை, 2018

பெசன்ட்நகர் அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோயில்


மூலவர்                 : அஷ்டலட்சுமி, மகாலட்சுமி, மகாவிஷ்ணு.
அம்மன்/தாயார் : தைரியலட்சுமி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி சமுத்திர புஷ்கரணி (வங்கக் கடல்)
தல வரலாறு
சுமார் 25 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோவில் பெருமளவு பக்தர்கள் வருகையினால் நாளடைவில் ெசன்னையின் மிகவும் புகழ்பெற்ற கோவிலாக ஆனது. சென்னை பெசன்ட் நகர் பீச் மிகவும் புகழ் பெற்றது. இந்த பீச்சுக்குக்கு அருகில் இக்கோவில் அமைந்துள்ளதால் - தவிர ஏராளமான சுற்றுலா பயணிகளும் கோவிலுக்கு வருகை தருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் என்ற ஊரில் - பெருமாள் கோவிலைப் போலவே இக்கோவில் அடுக்கடுக்காக கட்டப்பட்டுள்ளது மிகவும் விசேஷம். அருைமயான சலவைக் கற்களால் கட்டப்பட்டுள்ள இக்கோவிலில் உள்ள சுதைகள் மிகவும் அழகுறஅமைக்கப்பட்டுள்ளன.
தல சிறப்பு:
கோபுரத்தில் ஓம்கார வடிவத்தில் அஷ்டாங்க விமானத்துடன் கூடியதாக திருக்கோவில் அமைந்துள்ளது. (ஓம்கார சேத்திரம்) கோபுரத்தின் நிழல் பூமியில் விழாது. இது தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தின்- சிறப்பை ஒட்டி அமைந்துள்ளது.
தல பெருமை:
அஷ்டலட்சுமிகளும் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கிறார்கள்.
கடல் அருகே அமைந்திருக்கும் அழகிய திருக்கோவில். பெருமாள் நின்ற கல்யாணத் திருக்கோலம். தாயார் 9 கஜம் (மடிசார்) புடவை கட்டி அருளுகிறார்.
பொதுத்தகவல்:
ஆறுகால பூஜைகள் இத்தலத்தில் நடக்கின்றன என்பது. குறிப்பிடத்தக்க அம்சம். இங்கு முழுக்க முழுக்க நெய் விளக்குகள் மட்டுமே ஏற்றப்படுகின்றன.
திருவிழா:
- புரட்டாசி நவராத்திரி திருவிழா 10 நாட்கள் இத்தலத்தில் பத்து விதமான அலங்காரங்களில் திருவிழா நடைபெறும் இத்திருவிழாவின் போது பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கூடுவர். தீபாவளி, லட்சுமி பூஜை, தை வெள்ளி. ஆடி வெள்ளி ஆகிய நாட்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அந்த தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருவர்.
நேர்த்திக்கடன்:
வேண்டிய வரங்கள் எல்லாம் கிடைக்கும் இத்தலத்தில், அபிஷேக ஆராதனைகள், புடவை சாத்துதல் ஆகியவையும், பிரசாதம் செய்து விநியோகிப்பதும் இக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
கோயிலை எப்படி அடையலாம்?
சென்னை நகரின் மத்தியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயில் அமைந்துள்ளது.
ரயில் நிலையம் –- அடையாறு இந்திரா நகர் மெட்ரோ ரெயில் நிலையம்
தொடர்பு முகவரி: 
செயல் அலுவலர் அருள்மிகு அஷ்டலட்சுமி திருக்கோவில்,
பெசன்ட் நகர் - – 600 090. சென்னை.
போன்: +91-–44–-2446 6777, 2491 7777
மின்னஞ்சல்: mahalakshmitemple015@gmail.com

வியாழன், 12 மே, 2016

காட்டு செல்லியம்மன்



திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்திலிருந்து ஊத்துக்கோட்டை செல்லும் நெடுஞ்சாலையில், தண்டலம் அடுத்த சூலைமேனி ஊரிலிருந்து தேர்வாய் கண்டிகை சிப்காட் தொழிற்பேட்டைக்குச் செல்லும் சாலையில் சுமார் 8 கி.மீ. தொலைவில் செங்கரை கிராமத்தில் அருள்மிகு காட்டு செல்லியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
வியாழக்கிழமைகளில் சூலைமேனியிலிருந்து அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன, மற்ற நாட்களில் அதிக அளவில் ஷேர் ஆட்டோக்கள் இயங்குகின்றன.

பலருக்கு குல தெய்வமாக இருப்பது காட்டுக்குள் இருக்கும் அம்மன். வீட்டில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் முதலில் அந்த அம்மனுக்குப் பொங்கலிட்டு வழிபடுவார்கள். பிள்ளைச் செல்வம் வரம் வேண்டுவோர் ஒன்பது வாரம் வந்து வணங்கி பலன் பெற்று குழந்தைக்கு, ‘செல்லன்’ ‘செல்லி’ எனப் பெயர் சூட்டி மொட்டை அடித்துக் காது குத்துவார்கள். நோய் நொடி தீர வெற்றிலை மாலை சார்த்துவார்கள். திருமணத் தடை நீங்க வேண்டிக்கொள்ளுவதும் பிரார்த்தனையாக வஸ்திரத்தைக் கிழித்து பீரை மரத்தில் கட்டிப் பலன் பெறுவதும், எதிரிகள் வாய்க்குப் பூட்டுப் போடும் பழக்கமும் நடைமுறையில் உள்ள கோயில் அது.


இத்தனை நடைமுறைகள் பொதுமக்களால் பின்பற்றப்பட்டாலும் கோபுரம் மண்டபம், விமானம், கருவறை, கொடி மரம், பலி பீடம் எனத் தனித்தனியான ஸ்தூல அமைப்புகள் எதுவும் இல்லாத கோயில் அது. சுற்றிலும் சுமார் 36 ஏக்கர் பரப்புள்ள காட்டில் அமைந்த இயற்கைக் கோயில்.


திருவள்ளூர் மாவட்டம் செங்கரை கிராமத்தில் வனப்பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு காட்டுச் செல்லியம்மன் கோவில். காட்டை ஒட்டி ஏரி, ஏரியின் மறு கரையில் ஊர். ஏரிக் கரையில் செக்கச் செவேல் என அம்மன் காட்சி தந்ததால் செங்கரை என அந்தக் கிராமம் வழங்கப்படுகிறது. சிறிய வெற்றிலையைப் போல் இரண்டு மடங்கு தடிமனும் சிறிய அளவும் உள்ள, சித்த மருத்துவத்துக்குப் பயன்படும் இலைகள் உள்ள கொடி உள்ளது. அந்த இலையில் வாசம் எதுவும் இல்லை.கொடியில் பால் வருவது இல்லை.

கொடியில் பூ பூப்பது, காய் காய்ப்பது, பழம் உண்டாவது இல்லை. ஒவ்வொரு மார்கழி முடிந்து தை மாதம் வரும் போது இலைகள் எல்லாம் கொட்டி பங்குனி மாதம் 15 தேதிக்குள் புத்திலைகள் தோன்றி புது நிழல் தரத் துவங்கிவிடும். இந்தத் தன்மை கொண்ட வேதைக் கொடி என்னும் தாவரத்தின் பந்தல் ஓரிடத்தில் ஆழக்கால் பதிந்து, கிளை பரப்பியுள்ளது. காலங்காலமாய் காட்டுச் செல்லியம்மன் என அழைக்கப்படும் இந்த தெய்வத்தின் மேல் அமைந்துள்ள அந்த வேதைக்கொடி பசுமையாய் அழகாய் பந்தலாய் படர்ந்து நின்று அம்மனுக்கும் பக்தர்களுக்கும் நிழல் தருகிறது.

அசுரனை அழித்தவள்

பெண்கள் பிற ஆடவரைத் தீண்ட மாட்டார்கள் என்பதால் தன்னை வென்று அழிப்பதானால் அது ஒரு பெண்ணால்தான் நடைபெற வேண்டும் என்று தாருகாசுரன் வரம் பெற்றிருந்தான். தேவர்களுக்கும் மக்களுக்கும் கடும் துன்பம் தந்துகொண்டிருந்தான். அவனைக் கொல்ல சிவன், சக்திக்குக் கட்டளையிட்டார். சக்தியின் கண்ணிலிருந்து நஞ்சை, விடக் கொடிய ஒரு விஷ சக்தி தோன்றியது. அந்தச் சக்தியின் கோபாக்னியில் தாருகன் எரிந்து சாம்பலானான்.

அந்தக் கோப சக்தி ஒரு குழந்தையாக உருவெடுத்தது. அந்தக் குழந்தைக்கு மேலும் மேலும் விஷம் கலந்த பாலை ஊட்டி மேலும் விஷ சக்தி நிறைந்ததாக உருவாக்கினாள் கோபாவேசத்தில் இருந்த சக்தி. எதிர் நாளில் அந்தக் குழந்தை கொடூரமானதாக இருக்கும் என்பதால் சிவன் அந்த விஷக் குழந்தையையும் அதன் பாலையும் தன்னுள்ளேயே ஒடுக்கிக் கொண்டார். கோப சக்தியின் விஷக் குழந்தை ஒடுக்கப்பட்டதால் சக்தி மூர்க்கம் கொண்டு ஆடி குதித்து ஆங்காரத்துடன் கோர தாண்டவம் ஆடினாள். ஆடலரசன் அவளது ஆட்டத்தை அடக்க எண்ணித் தன்னுடன் நாட்டியமாடப் போட்டிக்கு அழைத்தார்.


இருவரும் வெகு நேரம் சளைக்காமல் ஆட, நடுவில் தன் காதினை அலங்கரித்துக்கொண்டிருந்த தோடினை அவிழ்ந்து விழச் செய்து, மீண்டும் ஆட்டத்தின் நடுவே தன் காலால் எடுத்துப் பொருத்திக்கொண்டார். அதனையும் ஆட்டத்தின் அங்கமாகவேக் கருதிய அந்த உக்ர கோப சக்தி அவ்வாறு ஆடுவது சாத்தியம் இல்லை என நின்றாள். அந்நேரத்தில் சண்டி, சிவனுடன் ஆடிய அந்த ‘சண்ட தாண்டவம்’ என்னும் போட்டியில் தோற்றதாகக் கருதினாள்.

புற்றுக்குள் அமர்ந்த சக்தி

சண்ட தாண்டவத்தில் தோற்ற அன்னை காளி, தன்னால் உருவாகி அடங்கிய குழந்தையின் அழுகுரல், காதைப் பொத்திக்கொண்ட போதும் ஒலிப்பதாக உணர்ந்தார் வழியும் கண்ணீரோடு வேகமாக ஊரின் வடக்குப் புறமாய் அமைந்திருந்த காட்டுக்குள் சென்று வேதைக்கொடிகள் பின்னிப் படர்ந்து இருந்த பந்தலின் கீழ் அமர்ந்தாள். தன் சுய உருவைப் புற்று கொண்டு மூடும்படி செய்தாள்.

அவ்வாறு வேதைக்கொடியின் கீழ், வந்து அமர்ந்த நாள் ஒரு வியாழக்கிழமை. புற்று பெரியதாக வளர்ந்த நிலையில் ஊரார் அது முதல் வியாழக் கிழமைகளில் வந்து பகலில் பொங்கலிட்டு, படையலிட்டு அவளைத் தங்கள் குலசாமியாக வழிபடத் தொடங்கினர். மாலை 6 மணிக்குக் காட்டை விட்டு வெளியேறும் வழக்கத்தையும் பழக்கத்தில் கொண்டனர்.

ஊரார் அந்தக் காலாகாரியை ஊருக்குள் அழைத்துச் செல்ல முயன்று உத்தரவு கேட்டனர். சக்தி, ஒரு சிறுமியின் மீது அருளாக வந்து இறங்கி, தான் ஊருக்குள் வர விரும்பவில்லை என்றும் அவ்வாறு வந்தால் ஊருக்குள் குழந்தைகள் அழும் குரலோ, சண்ட தாண்டவத்தின்போது சிவன் கால் பதியும்போது ஏற்பட்ட உலக்கை இடிக்கும் சத்தமோ கேட்கக் கூடாது எனவும் கூறினாள். தான் எடுத்து வைத்துவரும் ஒவ்வோர் அடிக்கும் ஒரு காவு தர வேண்டும் எனவும் சாத்தியமில்லாத நிபந்தனைகளை விதித்தாள்.


எப்பாடு பட்டாவது தேவியை அழைத்துச் செல்ல வேண்டும் என நினைத்த ஊராரால் அருகில் உள்ள ஆலங்குளம்வரை மட்டுமே காவு கொடுத்து அழைத்துச் செல்ல முடிந்தது. உடன் அம்மன் மீண்டும் காட்டுக்குத் திரும்பி வேதைக்கொடி பந்தலின் கீழேயே அமர்ந்துவிட்டாள். அது முதல் அங்கேயே இருந்து அனைவருக்கும் அருள் வழங்குவதும் மாலை 6 மணிக்கு மேல் வெளி வந்து காட்டைச் சுற்றி உலாவி அவளை வழிபடுவோரின் அல்லல்களைத் தீர்ப்பதும் காப்பதையுமே பழக்கமாகக் கொண்டிருக்கிறாள்.

கோயிலை விரும்பாத செல்லி

அம்மனுக்குக் கோயில் கட்ட உத்தரவு கேட்டபோது, அம்மனின் விருப்பம் கோயில் கட்டுவதல்ல என்பதை உணர்ந்தனர் மக்கள். புற்று நீக்கி தரிசனம் செய்ய அனுமதி கேட்டனர். அம்பாள் அனுமதிக்க, ஒரு வியாழக்கிழமையில் புற்றை சிறிது சிறிதாக அகற்ற தீச்சுடர் மகுடமும், நான்கு கரங்களும், சம்மணமிட்டு அமர்ந்த கோலத்தில் சர்வ ஆபரணம் சூடியவளாய் காட்சி தந்தாள்.

அன்று முதல் அந்த இடத்திலேயே வேதைக்கொடிப் பந்தலின் கீழ் ஜன்னி, கொஞ்சை, கருங்காலி, வில்வம், தும்பி போன்ற மூலிகைச் செடிகள் சூழ இருந்து, அருள் செய்துவருகிறாள். தினமும் அபிஷேகமும் ஒரு கால பூஜையும் நடைபெறும். ஆடி மாதம் காய்கறி சீர் கட்டு என்னும் காய்கறி அலங்காரமும் கூழ் வார்த்தலும், சித்திரை 1-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று உளுந்தால் வடை செய்து மாலையாக்கி அம்பாளுக்குச் சார்த்தி வழிபட்டு பக்தர்களுக்கும் ஊருக்கும் விநியோகம் செய்யும் பழக்கமும் நடைமுறையில் உள்ளது.

ஞாயிறு, 1 மே, 2016

சுருட்டப்பள்ளி பள்ளிகொண்ட சிவன்



ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் அமைந்தள்ளது சுருட்டப்பள்ளி. 3,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோவில், சென்னையிலிருந்து பெரியபாளையம், ஊத்துக்கோட்டை வழியாக திருப்பதி செல்லும் வழியில் 56 கி.மீ., தூரத்தில் உள்ளது.
மூலவர்: பள்ளிகொண்ட சிவன், வால்மீகிஸ்வரர், அம்மன்: மரகதாம்பிகை,  தலவிருட்சம்: வில்வம்.
துர்வாச மகரிஷியின் சாபத்தால் இந்திரலோக பதவியை இழந்தான் இந்திரன். அசுரர்கள் அவனது ராஜ்யத்தைப் பிடித்தனர். இழந்த பதவியை பெற வேண்டுமானால் பாற்கடலை கடைந்து, அமுதம் உண்டு பலம் பெற வேண்டும் என தேவகுரு கூறினார்.
திருமாலின் உதவியுடன் வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும், மந்திர மலையை மத்தாகவும் கொண்டு, தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் ஒரு புறமுமாக பாற்கடலை ஏகாதசி தினத்தில் கடைந்தனர். வாசுகி பாம்பு வலி தாங்காமல் விஷத்தை கக்கியது. தேவர்களும், அசுரர்களும் பயந்து இதிலிருந்து தங்களை காப்பாற்ற சிவனை வேண்டினர். சிவன் தன் நிழலில் தோன்றிய சுந்தரரை அனுப்பி அந்த விஷத்தை திரட்டி எடுத்து வரக் கூறினார். சுந்தரர் மொத்த விஷத்தையும் ஒரு நாவல் பழம் போல் திரட்டி சிவனிடம் தந்தார். அப்போது அனைத்து தேவர்களும்,”சிவபெருமானே. இந்த விஷத்தை வெளியில் வீசினாலும், தாங்களே உண்டாலும் அனைத்து ஜீவராசிகளும் அழியும். இந்த இக்கட்டான் சூழ்நிலையிலிருந்து எங்களைக் காத்திடுங்கள்” என மன்றாடினார்.
உடனே சிவன் “விஷாபகரண மூர்த்தி“யாகி அந்த கொடிய நஞ்சினை விழுங்கினார். இதைக்கண்டு பயந்த பார்வதி, சிவனைத் தன் மடியில் கிடத்தி அவரது வாயிலிருந்த விஷம் கழுத்தினை விட்டு செல்லாதவாறு கண்டத்தில் கைவைத்து அழுத்தினாள். இதனால் சிவனின் கழுத்தில் நீலநிறத்தில் விஷம் தங்கியது. அவர் “நீலகண்டன்” ஆனார். விஷத்தைத் தடுத்து அமுதம் கிடைக்கச் செய்ததால் அம்மன் “அமுதாம்பிகை” ஆனாள். பிறகு சிவன் பார்வதியுடன் கைலாயம் சென்றார். அப்படி செல்லும் வழியில் இத்தலத்தில் சற்று இளைப்பாறியதாக சிவபுராணத்திலும், ஸ்கந்த புராணத்திலும் கூறப்படுகிறது.
பார்வதியின் மடியில் படுத்து ஓய்வெடுத்தார். இந்த அருட்காட்சியை சுருட்டப்பள்ளியில் பார்க்கலாம்.
சுவாமி பள்ளி கொண்டிருப்பதால், “பள்ளி கொண்டீஸ்வரர்” எனப்படுகிறார். பிரதோஷ காலத்தில் இத்தலத்து ஈசனை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மூலவரை வால்மீகிஸ்வரர் என்கிறார்கள். இவருக்கு எதிரில் இராமலிங்கம் உள்ளது. இந்த சன்னதிக்கு வெளியே துவாரபாலகருக்குப் பதில் சங்கநிதியும், பதுமநிதியும் உள்ளனர். அம்மன் மரகதாம்பிகை சன்னதிக்கு வெளியில், துவாரபாலகியருக்கு பதில் பாற்கடலிலிருந்து கிடைத்த காமதேனுவும், கற்பகவிருட்சமும் உள்ளது.
தெட்சிணாமூர்த்தி இத்தலத்தில்தான் தன் மனைவி தாராவுடன் தம்பதிகளாக அருள்பாலிக்கிறார். வியாழக்கிழமைகளில் இவரை வழிபட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும். பிரகாரத்தில் விநாயகர், முருகன், பிருகு முனிவர், பிரம்மா, விஷ்ணு, மார்க்கண்டேயர், நாரதர், சந்திரன், குபேரன், சூரியன், சப்தரிஷிகள், இந்திரன் வீற்றிருக்கிறார்கள்.
எங்குமே காணமுடியாத கோலத்தில் சிவன் பள்ளி கொண்ட நிலை. இங்கு அனைத்து தெய்வங்களும் தம்பதிகளாக அருள்பாலிப்பது தனி சிறப்பாகும். பள்ளி கொண்ட ஈஸ்வரன் – சர்வ மங்களாம்பிகை, வால்மீகிஸ்வரர் – மரகதாம்பிகை, விநாயகர் – சித்தி, புத்தி, சாஸ்தா – பூரணை, புஷ்கலை, குபேரன் – கவுரிதேவி, சங்கநிதி மற்றும் பதுமநிதி தன் மனைவியருடன் இப்படி அனைவரும் தத்தம் மனைவியருடன் அருள்பாலிக்கின்றனர்.

பிரார்த்தனை: பிரதோஷ பூஜை தோன்றுவதற்கு மூலகாரணமாக இருந்த தலமே சுருட்டப்பள்ளிதான். இவ்வுலகை காப்பதற்காக அமிர்தத்தை கொடுத்து விட்டு விஷத்தை உண்ட இந்த பள்ளிகொண்ட நாதனை சனிக்கிழமைகளில் வரும் மகாபிரதோஷ தினத்தில் வழிபட்டால் இழந்த செல்வம் மீண்டும் கிடைக்கும். பதவியிழந்தவர்கள் மீண்டும் அடைவர், பதவி உயர்வு கிடைக்கும், திருமணத்தடை விலகும், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்: பிரார்த்தனை நிறைவேறியவுடன் சிவபெருமானக்கு பிரதோஷ தினத்தன்று வில்வமாலை அர்ச்சனை செய்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

கண்ணீரை வரவழைத்த உண்மை சம்பவம்....

நாட்டில் ஏழைகள் ஒழிய வேண்டுமா?ஜாதி ஒழிய வேண்டுமா?
இன்று திருச்சிக்கு மகனை ஒரு கல்லூரியில் சேர்ப்பதற்காக சென்றிருந்தேன்,..அங்கு நல்ல உடையனிந்து ,நகையனிந்து காரில் கணவன் மனைவி மற்றும் மகனுடன் வந்து இறங்கினார்கள்,.அரசு வேலையில் இருவரும் இருக்கிறார்களாம்,அவர்கள் அமர்ந்தார்கள்,,அவர்களுக்கு அருகில் வயதான தம்பதிகள் சாதாரன உடையில் காலில் செருப்பு கூட இல்லாமல் ,தாய் தந்தையை இழந்த தனது பேரனுடன் ,அமர்ந்திருந்தனர்..அலுவலக சிப்பந்தி ஒவ்வொருவராக அழைத்தார்,,பிரகாஷ்,,785.மார்க்,என்றார்,காரில் வந்தவர்கள் எழுந்து முதல்வர் அருகில் சென்றனர் .
அவர் கோப்புகளை பார்த்துவிட்டு நீங்கள் SC,,கோட்டாவில் வருகிறீர்கள் எனவே தங்கும் விடுதிக்கும் சேர்த்து -2500-ரூபாய் கட்டி சேர்ந்து விடுங்கள் என்றார்,கட்டிவிட்டார்கள்,.அவர்கள் கிளம்பும்போது முதல்வர் உங்களுக்கு- 14000-ரூபாய் உதவித்தொகை கிடைக்கும் வாங்கிக்கொள்ளுங்கள்,என்றார் அவர்கள் சரி என்று கூறி சென்று விட்டனர்.
அடுத்து பிரவீன்-960-மார்க் என்று அழைத்தார்கள்,அப்போது அந்த வயதான தம்பதிகள் தங்கள் பேரனுடன் முதல்வர் அருகில் சென்றனர்,அப்போது முதல்வர் பெரியவரே நீங்கள் BC,-எனவே விடுதிக்கும் சேர்த்து -98000-ரூபாய் கட்டிவிடுங்கள் என்று கூறினார்..உடன் அவர் தன் இடுப்பிலிருந்த பணத்தை எடுத்து,என்னிப்பார்க்க கூட முடியாமல் நடுங்கும் கைகளால் அலுவலக உதவியாளரிடம் கொடுக்க,அவர் அதை எண்ணிப்பார்த்துவிட்டு ஆயிரம் ரூபாய் குறைகிறது என்று சொல்ல ,பெரியவர் மனைவியை பார்க்க அந்த வயதான பெண்மனி தனது சுருக்கு பையிலிருந்து நடுங்கும் விரல்களால் சில்லரை நோட்டுகளை எண்ணிக் கொடுக்க .பையனை சேர்த்துவிட்டு அந்த தம்பதிகள் வெளியில் செல்லும்போது,அந்த பெரியவர் தன் மனைவியின் தோளை தொட்டு ,பாக்கியம் பஸ்ஸுக்கு பணமிருக்கா என்று கேட்டார்,.
இதை பார்த்தவுடன் ,ஆயிரம் சிறை கம்பிகளையும்,பிரச்சினைகளையும் பார்த்து கலங்காத கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.
இதற்காகத்தான் ஜாதிக்கொரு நீதியா?

சனி, 30 ஏப்ரல், 2016

மே 19ல் பார்ப்போம்

ஒரு ஊரில் உள்ள விவசாயிகள் ஓர் ஆட்டுப்பட்டி வைத்திருந்தனர்.
அதைக்கண்டு அங்குவந்த ஒரு ஓநாய் அந்த ஆடுகளை கொன்று திங்க ஆரம்பித்தன. அதைக்கண்ட விவசாயிகள் அந்த ஓநாயை விரட்டி துரத்தினர்.
ஓநாயை விவசாயிகள் விரட்டிய நேரம் ஆட்டுப்பட்டியின் ஆடுகளை அங்கு வந்த நரி கொன்று தின்ன ஆரம்பித்தது.
இதை கேள்விபட்ட விவசாயிகள் துரத்தி வந்த ஓநாயை விட்டுவிட்டு ஆட்டுப்பட்டிக்கு வந்து நரியை விரட்டி துரத்த ஆரம்பித்தனர்.
நன்கு பசியாரிய நரியும் விவசாயிகளிடம் பிடிபடாமல் ஓடியது.
விவசாயிகள் நரியை தேடி ஓடியதை அறிந்த ஓநாய் மீண்டும் ஆட்டுப்பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கொன்று தின்றது.
இந்த முறை தன் குட்டிகளையும் ஓநாய் தன்னுடன் அழைத்து வந்து குடும்பத்துடன் ஆடுகளை அடித்து தின்றது.
இதை கேள்விபட்ட விவசாயிகள் நரியை விட்டு ஓநாயையும் அதன் குட்டிகளையும் விரட்டத்தொடங்கினர்.
அந்த நேரத்தில் ஓய்விலிருந்த நரி தன் தோழியான குள்ளநரியையும் கூட்டிவந்து ஆட்டினை அடித்து சாப்பிட ஆரம்பித்தன.
இதே கதை தொடர்கதையாகி ஆடுகளையும் இழந்து, சாப்பிடவும் வழியில்லாமல் ஓய்வு உறக்கம் இன்றி தெம்பின்றி இருந்த விவசாயிகளை நன்கு தின்று கொழுத்த ஓநாய் தன் குட்டி, அதனுடைய குட்டிகள் என எல்லாம் சேர்ந்து ஆட்டுடன் சேர்த்து விவசாயிகளையும் கடித்துக்குதற ஆரம்பித்தன.
ஓநாய்களே ஆட்டை எடுத்துக்கொண்டால் நாம் என்ன செய்வது என யேசித்த நரி தந்திரமாக ஒரு காரியம் செய்தது.
விவசாயிகளிடம் தாமக சென்று நான் திருந்தி விட்டேன், எல்லா தவறுக்கும் காரணமான என் தோழி குள்ள நரியையும் அவள் குடும்பத்தையும் துரத்திவிட்டேன், எனக்கு என யாருமே இல்லை, நான் இங்கு பட்டியிலேயே இருந்து உங்கள் ஆடுகளை நான் பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் போய் ஓநாயையும் அதன் குடும்பத்தையும் விரட்டி அடியுங்கள் என்றது.
இந்த நரியின் கபட நாடகத்தை உண்மை என நம்பிய விவசாயிகளும் அந்த ஓநாய் குடும்பத்தை தூரமாக துரத்தி விட்டு திரும்பி வந்து பார்த்தால் அந்த துரோகி நரி தனது தோழி அதன் குட்டிகள் என பெருங்கூட்டத்துடன் பட்டியிலுள்ள ஆடுகளை சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்து எதுவும் செய்ய தெம்பில்லாமல் அழத்தொடங்கினர்.
இப்பொழுது மீண்டும் ஆட்டுப்பட்டியை கைப்பற்றபசியோடு காத்திருக்கும் ஓநாய்குடும்பம் ஒருபக்கம், உண்டு களைத்து ஓய்விலிருக்கும் நரியும், தோழியும் மறுபக்கம்.
என்ன செய்வான் விவசாயி மீண்டும் முட்டாள் தனமாக நரியையோ, ஓநாயையோ துரத்தப்போகிறானா?
அல்லது ஆட்டுப்பட்டிக்கு வீரமான நல்ல காவலனை வைக்கப்போகிறானா? .
.
.
..
.
.
.
.
.
மே 19ல் பார்ப்போம்.

எதிரியை விட ஆபத்தானவர்கள் அவர்கள்...

அந்த பெண் வளர்ப்பு பிராணியாக ஒரு மலைப்பாம்பை வளர்த்து வந்தார்.அது அந்த பெண்ணின் மேல் எப்போதும் பரவி திரியும்.திடீரென்று சில நாட்களாக அந்த மலைப்பாம்பு உணவு உண்பதை நிறுத்தி விட்டதையும் அத்துடன் புதிய வழக்கமாக இரவினில் அந்த பெண் தூங்கும்போது அவள் மீது படுத்து கொள்வதையும் கவனித்தார்.அவருக்கு மிகுந்த கவலை வந்துவிட்டது.என்ன என்னவோ செய்து பார்த்தும் அந்த பாம்பு எதையும் உண்ணவில்லை.இறுதியாக அந்த மலைப்பாம்பை ஒரு கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்று பரிசோதித்தார்.பரிசோதித்து முடித்தவுடன் அந்த மருத்துவர் கவலையுடன் அந்த பெண்ணிடம் ஒரு அதிர்ச்சியான தகவலை தெரிவித்தார்."உங்க பாம்பு உங்களை கொன்று விழுங்க தயாராகிக்கொண்டிருக்கிறது.உங்களுடைய நீள அகலத்தை இரவுகளில் நீங்கள் தூங்கும்போது அளக்கிறது.அது உங்களை அதனுடைய இரையாக முடிவு செய்த மறுகணமே உங்களை விழுங்க வசதியாக தன்னுடைய வயிற்றை காலி செய்துக்கொண்டிருக்கிறது.உடனடியாக அதனை கொல்லுங்கள்....!"என்பதே அது.
நீதி:உங்களை சுற்றியுள்ள அனைவரும்,உங்களை அரவணைக்கும் அனைவரும் நல்லவர்கள் என கருதுவது ஆபத்து.உங்களை விழுங்கி ஏப்பம் விட தயாராக இருக்கும் அந்த மலைப்பாம்பை போன்ற நண்பர்களை இனம்கண்டு களைந்துவிடுங்கள்.