ஞாயிறு, 3 அக்டோபர், 2010

சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு


சுவாமி விவேகானந்தர் 12.01.1863ம் ஆண்டு கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் முதல் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. இவர் சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இளம் வயதிலிருந்தே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார்.


பள்ளிப்படிப்பை முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் தத்துவம் பயின்றார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார். அப்பொழுது இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் அவர் மனதில் எழுந்தது. இறைவனைப் பலர் வழிபடுவதும், உலகின் வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக தோன்றியது. இது பற்றி பல பெரியோர்களிடம் விவாதித்தார்; மேலும், அக்காலகட்டத்தில் பிரபலமாயிருந்த பிரம்ம சமாஜத்தில் உறுப்பினரானார். ஆனால் இம்முயற்சிகள் யாவும் அவர் கேள்விகளுக்கு தகுந்த விடையளிக்க முடியவில்லை.


இறை உண்மைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, ஷ்ரீராமகிருஷ்ணரைப் பற்றி கேள்விப்பட்டு அவரிடம் சென்றார் சுவாமி விவேகானந்தர். ஷ்ரீராமகிருஷ்ணரை முதன் முதலாக விவேகானந்தர் சந்தித்த ஆண்டு 1881. எதையும் பகுத்தறிந்து ஏற்றுக் கொள்ளும் விவேகானந்தரால் முதலில் ஷ்ரீராமகிருஷ்ணரின் இறைவனைப் பற்றிய கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பின்னர் ஷ்ரீராமகிருஷ்ணருடன் பல வாதங்கள் புரிந்த பின்பும் அவரை பலமுறை பரிசோதித்த பின்பும் அவரையும் அவர் கருத்துக்களையும் ஏற்றுக்கொண்டார் சுவாமி விவேகானந்தர். தன் மற்ற சீடர்களிடம் உருவ வழிபாட்டையே முதன்மையாக போதித்த ஷ்ரீராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தரிடம் அத்வைதம் எனப்படும் அருவ வழிபாட்டை போதித்தார்


1886 ஆம் ஆண்டு ஷ்ரீராமகிருஷ்ணர் இறந்த பின் சுவாமி விவேகானந்தரும் ஷ்ரீராமகிருஷ்ணரின் மற்ற முதன்மை சீடர்களும் துறவிகளாயினர். பின்னர் நான்கு ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சுற்றினார் சுவாமி விவேகானந்தர். தன்னுடைய இந்த பயணங்கள் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து பகுதிகளின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை நிலை போன்றவற்றை அனுபவித்து அறிந்தார் சுவாமி விவேகானந்தர். அச்சமயத்தில் இந்திய மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் கீழானதாக இருந்தது. மேலும், அது இந்தியர் ஆங்கிலேயரிடம் அடிமைப்படிருந்த காலமாகும். தன் பயண முடிவில் 24 டிசம்பர் 1892 இல் கன்னியாகுமரி சென்ற விவேகானந்தர் அங்கே கடல் நடுவில் அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார். அந்த மூன்று நாட்கள் இந்தியாவின் கடந்த காலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலம் குறித்து தியானம் செய்ததாக பின்னர் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றும் அந்தப் பாறை சுவாமி விவேகானந்தர் நினைவிடமாக பராமரிக்கப் பட்டு வருகிறது.


கன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்த சுவாமி விவேகானந்தரிடம், அமெரிக்காவின் 1893ஆம் ஆண்டு உலக சமய மாநாட்டில் இந்து மதம் சார்பாக கலந்து கொள்ளுமாறு சென்னை நகர இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா பயணமானார். சிகாகோவின் உலகச் சமய மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் சில ஆண்டுகள் மேலைநாடுகளில் தங்கி பல சொற்பொழிவுகள் ஆற்றி வேதாந்த கருத்துக்களை அவர்களிடம் அறிமுகப் படுத்தினார். நியூயார்க், மற்றும் லண்டன் நகரங்களில் வேதாந்த மையங்களை நிறுவினார்.


1897 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியவுடன் கொழும்பு முதல் கல்கத்தா வரை அவர் ஆற்றிய பேச்சுக்கள், அப்போது கீழ்நிலையில் இருந்த இந்தியரை விழிப்புறச் செய்வதாகவும், இளைஞர்கள் தம்முள் இருந்த ஆற்றல்களை உணரும்படிச் செய்வதாகவும் அமைந்ததாக கருதப்படுகிறது. பின்னர் கல்கத்தாவில் ஷ்ரீராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடத்தை நிறுவினார் சுவாமி விவேகானந்தர். ஜனவரி 1899 முதல் டிசம்பர் 1900 வரை இரண்டாம் முறையாக மேல்நாட்டு பயணம் மேற்கொண்டார்.


1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள், தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். இன்று அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது.

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

கிருஷ்ண ஜெயந்தி

மஹா விஷ்ணு கிருஷ்ண அவதாரம் எடுத்த தினமே கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி) பண்டிகையாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
கிருஷ்ண அவதாரம் ஹிந்துக்களுக்கு மிக முக்கியமானதாகும். ஏனெனில் போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு, கிருஷ்ணர் கொடுக்கும் ஆலோசனைகளே இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையானது.
இந்த நாளில் கிருஷ்ணருக்குப் பிடித்த உணவுப் பொருட்களை செய்தும், கிருஷ்ணரின் சிலைகளை நன்றாக அலங்கரித்தும் கிருஷ்ணரை தங்கள் இல்லங்களுக்கு வரவழைக்கும் விதமாக, குழந்தையின் கால் பாதங்களை வரைந்தும் இந்துக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.
கிருஷ்ண ஜெயந்தியைப் பற்றி சில விவரங்கள்...
கிருஷ்ணரின் பிறப்பு
தேவகியும், கம்சனும் சகோதர சகோதரிகள். தனது தங்கை தேவகிக்கும், வாசுதேவருக்கும் பிறக்கும் 8வது குழந்தையால் கம்சனுக்கு மரணம் நிகழும் என்று வானத்தில் இருந்து ஒரு குரல் கூற, அதனால் அச்சமுற்ற கம்சன் தேவகியையும், வாசுதேவரையும் சிறையில் அடைத்து தன் கண்காணிப்பிலேயே வைத்துக் கொண்டான்.
இருவருக்கும் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் கம்சன் ஈவு-இரக்கமின்றி கொன்று வந்தான். இவ்வாறாக 7 குழந்தைகளையும் கம்சனே கொன்றான். தேவகி 8வது முறையாக கர்பமுற்றாள். அதே சமயம் வாசுதேவரின் நண்பரும் ராஜாவுமான நந்தாவின் மனைவி யசோதாவும் கர்பமுற்றாள்.
இந்நிலையில் ஆவணித் திங்கள் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று இரவு நேரத்தில் கிருஷ்ணர் பிறந்தார் (அவதரித்தார்). அதே சமயம் யசோதாவும் ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுத்தார்.
அப்போது சிறைக்குள் விஷ்ணு தோன்றி, இக்குழந்தையை கோகுலத்தில் உள்ள யசோதாவின் வீட்டில் கொண்டு சென்று சேர்த்துவிடு. அங்கு அவளுக்குப் பிறந்திருக்கும் பெண் குழந்தையை இங்கே கொண்டு வந்துவிடு என்று வாசுதேவருக்கு ஆணையிட்டார்.
வாசுதேவரும் கிருஷ்ணரை கூடையில் சுமந்தபடி கொட்டும் மழையில் கோகுலத்தை நோக்கிச் சென்றார். அங்கு கிருஷ்ணரை வைத்துவிட்டு, பெண் குழந்தையை எடுத்துக் கொண்டு வந்தார் வாசுதேவர்.
அந்த பெண் குழந்தை வந்ததும், 8வது குழந்தை பிறந்த செய்தி கம்சனுக்கு எட்டியது. உடனடியாக விரைந்து வந்த கம்சன், அந்த பெண் குழந்தையை கொல்ல முயன்றபோது, அது அவனது பிடியில் இருந்து விலகிச் சென்று காளித் தோற்றம் கொண்டு பேசியது, கம்சனே உன்னைக் வதம் செய்வதற்கான 8வது குழந்தை கிருஷ்ணன் பிறந்துவிட்டான். அவன் வேறொரு இடத்தில் வளர்ந்து உன்னைக் கொல்ல வருவான் என்று கூறி மறைந்தது.
இதையடுத்து தேவகியையும், வாசுதேவரையும் கம்சன் விடுதலை செய்தான்.
அதே நேரத்தில், நந்தருக்கும், யசோதாவுக்கும் குழந்தை பிறந்ததை கோகுலமே கொண்டாடியது. குழந்தைக்கு நந்தர் கிருஷ்ணர் என்று பெயரிட்டார்.
அந்த தினத்தை கோகுலமே கொண்டாடியது. தற்போது இந்தியாவிலும், உலக நாடுகளில் வாழும் இந்தியர்களும் கிருஷ்ண ஜெயந்தி விழாவாகக் கொண்டாடி வருகின்றனர்.
கிருஷ்ணருக்குப் பிடித்த இனிப்புகள்: அவல் லட்டு, சேமியா பாயசம்.
நன்றி: வெப்துனியா

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

கந்த சஷ்டி கவசம் விளக்கம்

கவசம் என்றால் நம்மைக் காப்பாற்ற்க் கூடிய ஒன்று. போரில் யுத்த வீரர்கள்தன் உடலைக் காத்துக் கொள்ளக் கவசம் அணிந்து கொள்வார்கள். இங்கு கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்த்தும் காபாற்றுகிறது. இதை அருளியவர் ஸ்ரீதேவராய சுவாமிகள், பெரிய முருக பக்தர், ஒவ்வொரு மூச்சிலும் முருகனையே சுவாசித்தார். அவர் மிகவும் எளிய முறையாக நமக்கு கவசம் அளித்துள்ளார். தினம் காலையிலும் மாலையிலும் ஓத அதுவும் பல தடவைகள் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான்.
ஆரம்பமே சஷ்டியை நோக்க என்று இருக்கிறது. சஷ்டி என்பது அமாவாசை அல்லது பூர்ணிமாவுக்கும் அடுத்து ஆறாம் நாள். ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு, போன்றவைகளைக் குறிக்கும். செவ்வாய் ரோகக் காரகன். இந்த எல்லா தோஷத்தைப் போக்கும் பெருமான் திரு முருகப் பெருமான். அவருக்கு உகந்த நாள் சஷ்டி, சஷ்டி என்றால் ஆறு, முருகனுக்கோ ஆறு முகங்கள், ச ர வ ண ப வ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்ணால் வளர்க்கப்பட்டவர். நாம் அந்தத் திருவடியை விடாது பிடித்தால் மேலே சொன்ன ஒரு கெடுதலும் அண்டாது, வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்றால் அமைதிதானே.
இப்போது சஷ்டி கவசத்தைப் பார்ப்போம்.
கந்தன் வரும் அழகே அழகு, பாதம் இரண்டில் பண்மணிச் சலங்கை கீதம் பாட கிண்கிணியாட, மயில் மேல் அமர்ந்து ஆடி ஆடி வரும் அழகை என்னவென்பது? இந்திரன் மற்ற எட்டு திசைகளிலிருந்தும் பலர் போற்றுகிறரர்கள். முருகன் வந்து விட்டான், இப்போது என்னைக் காக்க வேண்டும், ப்ன்னிரண்டு விழிகளும் பன்னிரெண்டு ஆயுதத்துடன் வந்து என்னைக் காக்க வேண்டும்.
அவர் அழகை வர்ணிக்கும் போது பரமேச்வரி பெற்ற மகனே முருகா, உன் நெற்றியில் இருக்கும் திரு நீர் அழகும், நீண்ட புருவமும், பவளச் செவ்வாயும், காதில் அசைந்தாடும் குண்டலமும், அழகிய மார்பில் தங்க நகைகளும், பதக்கங்களும், நவரத்ன மாலை அசைய உன் வயிறும், அதில் பட்டு வஸ்திரமும் சுடர் ஒளி விட்டு வீச, மயில் மேலேறி வந்து கேட்டவர்களுக்கு எல்லாம் வரம் தரும் முருகா, என்றெல்லாம் அவரை ஸ்ரீ தேவராயர் வர்ணிக்கிறார்.
அவர் கூப்பிடும் வேல்கள் தான் எத்தனை? உடம்பில் தான் எத்தனை பாகங்கள்? காக்க என்று வேலை அழைகிறார், வதனத்திற்கு அழகு வேல், நெற்றிக்குப் புனிதவேல், கண்ணிற்குக் கதிர்வேல் நாசிகளுக்கு நல்வேல், செவிகளுக்கு வேலவர் வேல், பற்களுக்கு முனைவேல், செப்பிய நாவிற்கு செவ்வேல், கன்னத்திற்கு கதிர்வேல், கழுத்திற்கு இனிய வேல் மார்பிற்கு இரத்தின வடிவேல், இளமுலை மார்புக்கு திருவேல், தோள்களுக்கு வடிவேல் பிடறிகளுக்கு பெருவேல், அழகு முதுகிற்கு அருள்வேல், வயிறுக்கு வெற்றிவேல் சின்ன இடைக்கு செவ்வேல், நாண்கயிற்றை நால்வேல், பிட்டம் இரண்டும் பெருவேல், கணைக்காலுக்கு கதிர் வேல், ஐவிரல்களுக்கு அருள்வேல், கைகளுக்கு கருணை வேல், நாபிக்கமலம் நல்வேல் முப்பால் நாடியை முனை வேல், எப்போதும் என்னை எதிர் வேல், பகலில் வஜ்ர வேல், இரவில் அனைய வேல், காக்க காக்க கன்க வேல் காக்க.
அப்பப்பா எதனி விதமான் வேல் நம்மைக் காக்கின்றன.
அடுத்தது எத்தனை விதமான் பயத்திலிருந்து காக்க வேண்டும், பில்லி, சூன்யம், பெரும் பகை, வல்லபூதம், பேய்கள், அடங்காமுனி, கொள்ளிவாய்ப் பிசாசு, குறளைப் பேய்கள், ப்ரும்ம ராட்சசன், இரிசி காட்டேரி, இவைகள் அத்தனையும் முருகன் பெயர் சொன்னாலே ஓடி ஒளிந்து விடும் என்கிறார். அடுத்தது மந்திரவாதிகள் கெடுதல் செய்ய உபயோகிக்கும் பொருட்கள் பாவை, பொம்மை, முடி, மண்டைஓடு, எலும்பு, நகம், சின்ன மண்பானை, மாயாஜால் மந்திரம், இவைகள் எல்லாம் சஷ்டி கவச்ம் படித்தால் செயலிழந்து விடும் என்கிறார்.
பின் மிருகங்களைப் பார்ப்போம், புலியும் நரியும், எலியும் கரடியும், தேளும் பாம்பும் செய்யான், பூரான், இவைகளால் எற்படும் விஷம் ச்ஷ்டி கவச ஓசையிலேயே இறங்கி விடும் என்கிறார். நோய்களை எடுத்துக்கொண்டால் வலிப்பு, சுரம், சுளுக்கு, ஒத்த தலைவலி, வாதம், பைத்தியம், பித்தம், சூலை, குடைச்சல், சிலந்தி, குடல் புண், பக்கப் பிளவை போன்ற வியாதிகள் இதப் படித்தால் உடனே சரியாகி விடும் என்கிறார்.
இதைப் படித்தால் வறுமை ஓடிவிடும் நவகிரஹங்களும் நமக்குத் துணை இருப்பார்கள் சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள் முகத்தில் தெய்வீக ஒளி வீசும்.
கந்த சஷ்டி கவசம் படியுங்கள் வேலனப் போற்றுங்கள்.

இடும்பாயுதனே இடும்பாபோற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேளே போற்றி
உயர்கிரி கனக் சபைக்கு ஓர்
அரசேமயில் நடமிடுவோய் மலரடி
சரணம்சரணம், சரணம் சரவணபவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்

பின் குறிப்பு, கந்த சஷ்டி தினத்தன்று இதை தயவு செய்து படிக்க வேண்டுகிறேன்.

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

எழும்பூர் என பெயர்வர காரணம் ஒரு பெருமாள் கோவில்!

சென்னையில் முக்கியமான இடங்களில் ஒன்று எழும்பூர். தென் மாவட்டங்களிலிருந்து ரெயிலில் வருபவர்கள் இங்கு தான் இறங்க வேண்டும்.
ஆனால் எழும்பூர் என்ற பெயர் வருவதற்கு காரணம் ஒரு கோயில் என்பது இப்பகுதிக்கு இன்னொரு சிறப்பாகும். அத்தகைய சிறப்பு வாய்ந்த எழும்பூர் எல்.என்.பி.கோயில் தெருவில் உள்ளது அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோயில் ஆகும்.
அருள்மிகு சீனிவாசப் பெருமாள் திருக்கோவில் : வைகுண்டத்தில் வீற்றிருக்கும் மகா விஷ்ணு இந்த மண்ணுலகில் பல்வேறு இடங்களில் கோயில் கொண்டு இருக்கிறார். இப்படி அவர், 600 ஆண்டுகளுக்கு முன்பு பத்மாவதி தாயார் உடனுறை சீனிவாசப் பெருமாளாகி, எழும்பூர் என்று இப்போது அழைக்கப்படும் இடத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.
அவரை கௌசிகர், அத்திரி, விஸ்வாமித்திரர், கௌதமர், பரத்துவாஜர், வசிஷ்டர், கஸ்யபவர் ஆகிய ஏழு முனிவர்கள் வழிபட்டு ஆராதித்து வந்தமையால்,
சீனிவாசப் பெருமாள் அமைந்த இடம் எழுமூர் என்று அழைக்கப்படலாயிற்று. இதுவே நாளடைவில் மருவி எழும்பூர் என அறியப்படுகிறது.
இத்திருக்கோயிலில் பூஜைமுறைகள் ஸ்ரீ வைகானச ஆகம முறைப்படி நடைபெறுகிறது. இங்கு எழுந்தருளியுள்ள அருள்மிகு சீனிவாசப் பெருமாள் தன்னை நாடி வந்து துதிப்பவர்களுக்கு எல்லாச் செல்வங்களையும் வாரி வழங்கி அருள்பாலிப்பது கண்கூடு.
இதேபோன்று இவ்வாலயத்தில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ பத்மாவதி தாயாரும், ஆஞ்சநேய பெருமானும் தன்னை நாடி வரும் இறையன்பர்களின் தேவைகளை வேண்டியவாறு ஆசி புரிந்து எல்லா நலன்களையும் தருவது தனிச் சிறப்பாகும்.
இத்திருக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் இதர தெய்வங்களான ஸ்ரீராமர், ஸ்ரீ ஆண்டாள் மற்றும் ஸ்ரீ விஸ்வ சேனர் (தும்பிக்கை ஆழ்வார்) ஆகியோரும் பக்தர்களுக்கு தங்களுடைய அருளை வாரி வழங்கி அனைவரையும் மேன்மைப்படுத்த தயங்கவில்லை.
உற்சவங்கள்:
இந்தக் கோயிலில் உற்சவங்களுக்கும் பஞ்சமில்லை. பிரம்மோற்சவம், கருடசேவை, ஸ்ரீ பத்மாவதி தாயார் பஞ்சமி தீர்த்த உற்சவம் ஆகியவை முக்கியமான உற்சவங்களாகும்.
புரட்டாசி திருவோணத்தில் பிரம்மோற்சவம், ஆவணி திருவோணத்தில் பவித்ரோற்சவம், மாநில மூல நட்சத்திரத்தில் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஜெயந்தி, மார்கழியில் பகல்பத்து, வைகுண்ட ஏகாதசி, இராப்பத்து உற்சவம், பங்குனியில் ஸ்ரீ ராம ஜெயந்தி, பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாண உற்சவம், தமிழ், யுகாதி மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு விழாக்கள், சித்திரை சதயம் - திருவாதிரை முடிய உடையவர் உற்சவம் என உற்சவங்கள் இத்திருக்கோவிலில் நடைபெறுகின்றன.
இந்த உற்சவங்கள் யாவும் திருமலையில் நடைபெறும் இதே உற்சவ நாட்களில் தான் நடைபெறுகிறது என்பது சிறப்பு அம்சமாகும்.
சீனிவாசப் பெருமாள் கோயில் மண்டபம் :
புகழ்பெற்ற இத்திருக்கோயிலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் அண்மையில் 5.45 லட்சம் செலவில் புதிய மண்டபம் ஒன்றும் கட்டப்பட்டு, திறப்பு விழாவும் கொண்டாடப்பட்டது.
இத்தனை சிறப்பு வாய்ந்த இக்கோயிலுக்குச் சென்று பத்மாவதி உடனுறை சீனிவாசப் பெருமாளை வழிபட்டு வாழ்வில் எல்லா நன்மைகளும் பெறுவோமாக!
நன்றி: tamil.webdunia.com

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

சைக்கிளின் உதிரி பாகங்களின் தமிழாக்கம்

Tube- மென் சக்கரம்
Tyre - வன் சக்கரம்
Front wheel - முன் சக்கரம்
Rear wheel (or) Back wheel - பின் சக்கரம்
Free wheel - வழங்கு சக்கரம்
Sprocket - இயக்குச் சக்கரம்
Multi gear sprocket - பல்லடுக்குப் பற்சக்கரம்
Training wheels - பயிற்சிச் சக்கரங்கள்
Hub - சக்கரக் குடம்
Front wheel axle - முன் அச்சுக் குடம்
Rear wheel axle - பின் அச்சுக் குடம்
Rim - சக்கரச் சட்டகம்
Gear - பல்சக்கரம்
Teeth - பல்
Wheel bearing - சக்கர உராய்வி
Ball bearing - பந்து உராய்வி
Bottom Bracket axle - அடிப்புறத் தண்டியக்கட்டை அச்சு
Cone cup - கூம்புக் கிண்ணம்
Mouth valve - மடிப்பு வாய்
Mouth valve cover - மடிப்பு வாய் மூடி
Chain - சங்கிலி
Chain link - சங்கிலி இணைப்பி
Chain pin - இணைப்பி ஒட்டி
Adjustable link - நெகிழ்வு இணைப்பி
Circlip - வட்டக் கவ்வி
Chain lever - சங்கிலி நெம்பி
Frame - சட்டகம்
Handle bar - பிடி செலுத்தி
Gripper - பிடியுறை
Cross Bar - குறுக்குத் தண்டு
Cross Bar cover - குறுக்குத் தண்டு உறை
Sissy Bar - சிறுமியர் இருக்கைத் தண்டு
Dynamo - மின் ஆக்கி
Head light - முகப்பு விளக்கு
Danger light (or) Light reflector - அபாய விளக்கு (அ) ஒளிதிருப்பி
Rearview Mirror - பின்காட்டி
Back Carrier - பொதி பிடிப்பி
Front Carrier Basket - பொதி ஏந்தி
Carrier support legs - பொதி பிடிப்பித் தாங்கு கால்கள்
Side box - பக்கவாட்டுப் பெட்டி
Stand - நிலை
Side stand - சாய்நிலை
Speedo meter (Odo meter) - வேகம்காட்டி
Fender - வண்டிக் காப்பு
Derailleurs - பற்சக்கர மாற்றி
Peg - ஆப்பு
Air pump - காற்றழுத்தி
Shock absorber - அதிர்வு ஏற்பி
Break - நிறுத்தி
Break shoes - நிறுத்துக்கட்டை
Break wire - நிறுத்திழை
Break Lever - நிறுத்து நெம்பி
Front break ankle - முன் நிறுத்துக் கணு
Back break ankle - பின் நிறுத்துக் கணு
Disc brake - வட்டு நிறுத்தி
Break connecting links - நிறுத்தி இணைப்பிகள்
Pedal - மிதிக்கட்டை
Reflecting Pedal - ஒளிதிருப்பி மிதிக்கட்டை
Pedal cover - மிதிக்கட்டை உறை
Pedal cup - மிதிக்கட்டைக் குமிழ்
Pedal rod - மிதிக்கட்டைத் தண்டு
Spindle - சுழலும் மிதிக்கூடு
Seat (Saddle) - இருக்கை
Seat Post - இருக்கை தாங்கி
Baby Seat - குழந்தை இருக்கை
Seat cover - இருக்கை உறை
Leather Seat - தோல் இருக்கை
Cushion seat - மெத்திருக்கை
Washer - நெருக்கு வில்லை
Tension washer - மிகுநெருக்கு வில்லை
Screw - திருகுமறை
Nut - ஆணி இறுக்கிBolt - திருகாணி
Spring - சுருள்
Bush - உள்ளாழி
Lever - நெம்பி
Rust - துரு
Balls - பொடிப்பந்துகள்
Crank - வளைவு அச்சு
Rivet - கடாவு ஆணி
Axle - அச்சு
Spring chassis - சுருள் அடிச்சட்டம்
Nose spring - சுருள் முனை
Fork - கவை
Horn - ஒலியெழுப்பி
Cable - கம்பியிழை
Knuckles - மூட்டுகள்
Clamp - கவ்வி
Ring - வளையம்
Hole - ஓட்டை
Hook - கொக்கி
Spokes - ஆரக்கால்கள்
Spoke guard - ஆரக் காப்பு
Spoke fixing screw - ஆரக்கால் திருகாணி
Spanner - மறைதிருகி
Spokes spanner - ஆரக்கால் மறைதிருகி
Screw driver - திருப்புளி
Tools - கருவிகள்
Pocket tools - பையடக்கக் கருவிகள்
Front Mud Guard - முன் மணல் காப்புறை
Back mud guard - பின் மணல் காப்புறை
Chain Guard - சங்கிலிக் காப்புறை
Dress Guard - ஆடைக் காப்புறை
Gloves - கையுறை
Head set - தலைக்கவசம்
Wrist band - மணிக்கட்டுப் பட்டை
Bell - மணி
Bell lever - மணி நெம்பி
Bell cup - மணி மூடி
Bell spring - மணிச் சுருள்
Bell frame - மணிச் சட்டகம்
Bell rivet - மணி கடாவி
Bell fixing clamp - மணிப் பொருத்தி
Lock - பூட்டு
Lock fixing clamp - பூட்டுப் பொருத்தி
Key - சாவி
Key chain - சாவிக் கொத்து
Chain lock - சங்கிலிப் பூட்டு
Inner wire - உள்ளிழை
Electrical parts - மின்னணுப் பாகங்கள்
Lighting Spoke - ஒளிரும் ஆரக்கால்
Spokes with balls - மணிகோத்த ஆரக்கால்
Extra fittings - கூடுதல் பொருத்திகள்
Foot rest - கால்தாங்கி
Baby foot rest - குழந்தைக் கால்தாங்கி
Water bottle - தண்ணீர்க் குடுவை
Racing cycle - பந்தய மிதிவண்டி
Mini cycle - சிறு மிதிவண்டி
Mountain cycle - மலை மிதிவண்டி
Foldable cycle - மடக்கு மிதிவண்டி
Wheel chair - சக்கர நாற்காலி
Beach cruiser - கடற்கரைத் துரிதவண்டி
One-wheel cycle - ஒரு சக்கர மிதிவண்டி
High-tech bike - அதிநுட்ப வண்டி
Kid cycle - சிறுவர் மிதிவண்டி
Ladies cycle - மகளிர் மிதிவண்டி
Tri cycle - முச்சக்கர வண்டி (அ) பொதி மிதிவண்டி
Cycle with motor - உந்து மிதிவண்டி
Inflating - காற்றடித்தல்
Patch - பட்டைPatching - பட்டை வைத்தல்
Patch work - சிறு வேலை (அ) சில்லறை வேலை
Over hauling - முழுச் சீரமைத்தல்
Painting - வண்ணம் தீட்டல்
Lubrication - எண்ணெய் இடல்
Wheel bend removal - கோட்டம் எடுத்தல்
Puncture - துளை
Puncture closure - துளைமூடல்
Puncture lotion - துளைமூடு பசை
Emory paper (Abrasive sheet) - தேய்ப்புப் பட்டை (உப்புத் தாள்)
Wooden mallet - மரச் சுத்தி
Grease - உயவுப் பசை
Lubricant oil - உயவு எண்ணெய்
Waste oil - கழிவு
நன்றி: தமிழ் நண்பர்கள்

வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

வரலட்சுமி நோன்பு (மகாலட்சுமி விரதம்)


வரலட்சுமி நோன்பு என்பது பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி ஹந்துக்களின் நோன்பாகும். ஆடி மாதம் வளர்பிறையில் முழுநிலவு வருவதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடும் இருக்கவும், தாலி பாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் இந்த நோன்பை சுமங்கலி பெண்கள் கடைபிடிக்கின்றனர்.
இந்த தினத்தில் வீட்டைச் சுத்தம் செய்து விளக்கேற்றி வாசனைப் புகையினால் இல்லத்தை நிறைத்து கலசம் ஒன்றில் லட்சுமியை வணங்கித் தொடங்குவர். கலசத்தினுள் பச்சரிசி, எலுமிச்சை, பொற்காசு என்பவற்றை இட்டு கலசத்தைப் பட்டாடையால் அலங்கரித்து, தங்கம், வெள்ளி அல்லது பஞ்ச உலோகங்களினால் ஆன இலட்சுமியின் உருவச்சிலையை அல்லது படத்தை கலசத்திலுள்ள தேங்காயில் வைப்பர். மஞ்சள் சரட்டை குங்குமத்தில் வைத்துக் கலசத்தில் அணிந்து வரலட்சுமியைக் கிழக்குப் பக்கமாக வைத்து வணங்குவர்.
தீப ஆராதனை செய்து இனிப்பான பலகாரங்களைப் படைப்பர். பின்னர் கலசத்தில் வைத்த மஞ்சள் சரட்டை விரதமிருந்தவர் கையில் கட்டுவர். பின்னர் படைக்கப்பட்ட பொருட்களுடன் தாம்பூலம், மஞ்சள், புடவை போன்றவற்றை சுமங்கலிகளுக்கு தானமாகக் கொடுத்து ஆசி பெற்று காலை முதல் உண்ணாநோன்பிருந்ததை முறித்து தாமும் உண்டு விரதத்தை நிறைவேற்றுவர்.
அன்று முழுவதும் அஷ்டலட்சுமி தோத்திரம், லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வர். மாலை வேளைகளில் உற்றார்,சுற்றார் வீடுகளுக்குச் சென்று ஒருவருக்கொருவர் தாம்பூலம் பெற்றுக்கொள்வர்.
நன்றி: விக்கிபீடியா.

ஆலயங்களில் தேங்காய் உடைப்பது ஏன்?

ஆலயங்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம். ஏன் தேங்காய் உடைக்கிறோம். இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெரியாது. ஏதோ சுவாமிக்கு அர்ச்சனை பண்ணினோம். தரிசனம் செய்தோம் என்றவாறே இதை நாம் தொன்றுதொட்டு செய்து வருகிறோம். அதைப் பற்றி ஒரு சிறிய தத்துவ தகவல்.
தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்துள்ளது. தேங்காயின் மேல் கடுமையான ஓடும் அதனுள் மென்மையான பருப்புமாகிய காய்ப் பகுதியும் அதனுள் நீரும் உள்ளது.
உருண்டையான புற ஓடு பிரபஞ்சத்தை ஒத்து இருக்கிறது. இரண்டும் கோள வடிவம் உடையது. இது உலக மாயையைக் குறிப்பது ஆகும். உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கும்.
இளநீர் அதனால் விளையும் பரமானந்த அமிர்தத்தை ஒத்து இருக்கின்றது. ஜீவாத்மா மாயையினால் பரமாத்மாவை உணராமல் பரமானந்த பிராப்தியையும் பெறாமல் நிற்கின்றது. அதுபோல் வெள்ளை பகுதியையும், நீரையும் காண முடியாமல் ஓடு மறை(க்)கின்றது.
ஈசுவர சந்நிதியில் மாயையை அகற்றி தேஜோமய சுவரூபத்தை காட்டி அவர் அருளாள் பரமானந்த பேரமுதத்தை நுகரச் செய்யும் செயலையே இது காட்டுகிறது.
இவ்வளவு உட்கருத்து இருப்பதால் தான் தேங்காயை இறைவழிபாட்டில் முக்கிய பொருளாக வைத்து நம்முன்னோர்கள் வழிபட்டு வந்துள்ளனர் என்கிற உண்மையை நாம் உணர வேண்டும்.
நன்றி: தினசரி.

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

செல்போனை இனிமேல் இப்படி பயன்படுத்தாதீர்கள்

1. உங்களுக்கு எவ்வளவு நெருக்கமான நண்பரோ அல்லது நண்பியாக இருந்தாலும் சரி உங்களுடைய அடையாளச் சான்றுகளை வைத்து அவர்களுக்கு சிம் கார்டு வாங்கித் தராதீர்கள்.
2. உங்களுக்கு பிடித்த காதலி அல்லது காதலன் அல்லது நெருக்கமானவரின் மிக அந்தரங்கமான செய்திகள்/வீடியோக்கள்/பேச்சுப்பதிவுகளை உங்களது செல்போனில் பதிவு செய்து பாதுகாத்து வைக்காதீர்கள்.
3. எதிர்முனையில் பேசுபவர் உங்கள் உரையாடலைப் பதிவு செய்யக்கூடும் என்பதால் மற்ற மூன்றாம் நபரைப்பற்றி கேட்டாலோ கூட அவதூறாக சொல்லி வைக்காதீர்கள்.
4. உங்களது மெமரிக்கார்டு முழுக்கவும் ஆபாசப் படங்களை சேமித்து வைக்காதீர்கள். உங்கள் வீட்டில் அம்மா/சகோதரி அல்லது அப்பா/சகோதரன் அவற்றைக் காண நேர்ந்தால் என்னாகும்? என்று யோசியுங்கள்.
5. உங்களது ஏ.டி.எம்.,வங்கிக் கணக்கு, ஆன்-லைன் நடைமுறைகளுக்கான பாஸ்வேர்டுகளை செல்போனில் பதிவு செய்து வைக்காதீர்கள்.
6. நீங்கள் யாரிடம் செல்போனில் பேசினாலும் 20 நிமிடங்களுக்குமேல் பேசாதீர்கள்.
7. உங்கள் செல்போனை எப்போதும் வலதுகாதில் மட்டுமே பயன்படுத்தாதீர்கள்.
8. உங்களுக்கு உபயோகமில்லாத மற்றும் ரீ சார்ஜ் செய்ய வேண்டாம் என நீங்கள் முடிவு செய்து ஒரு சிம் கார்டை வைத்திருந்தால் அதை யாரிடமும் கொடுக்காதீர்கள். உங்கள் குப்பைத் தொட்டியில் போடாதீர்கள். அந்த சிம் கார்டை இரு துண்டுகளாக உடைத்துவிடுங்கள்.இது மிக நல்லது.
நன்றி: ஆனந்த விகடன் மற்றும் நண்பர்கள் தகவல்கள்.

சனி, 24 ஜூலை, 2010

ஏழை மாணவிக்கு படிப்பதற்கு உதவுங்கள்.

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே ஏழை மாணவி உயர் கல்வி உதவிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சென்னகிருஷ்ணன். அவரது மனைவி மாரி. அவருக்கு வீரசக்தி என்ற மகனும், விஜயசக்தி (17) என்ற மகளும் உள்ளனர். அரசின் இலவச தொகுப்பு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மகன் வீரசக்தி அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் மூன்றாமாண்டு படித்து வருகிறார்.
விஜயசக்தி காரப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில் 500க்கு 449 மதிப்பெண் பெற்றார். விஜயசக்தி அதிக மதிப்பெண் பெற்றதால் ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி தாளாளர் திருமால்முருகன் ப்ளஸ் 2 வகுப்பில் இரண்டாண்டு இலவச கல்வியில் சேர்த்தார்.தற்போது, ப்ளஸ் 2 தேர்வில் 1,200க்கு 1,058 மதிப்பெண் பெற்றார். அவரது மருத்துவ கட்-ஆஃப் 182.50. அவருக்கு மருத்துவ ரேங்க் பட்டியலில் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரியில் பி.எஸ்சி., நர்சிங் படிப்பு கிடைத்துள்ளது. நர்சிங் படிப்புக்கு இடம் இலவசமாக கிடைத்தாலும் படிக்க வசதியில்லாமல் தவித்து வருகிறார். தனக்கு கல்வி உதவிகள் வழங்கினால், மேலும் தொடர்ந்து படிக்க வாய்ப்பு கிடைக்கும் என உதவிகளை எதிர்பார்க்கிறார். அவருக்கு படிப்பு உதவித்தொகை வழங்க விரும்புவோர், "விஜயசக்தி, த/பெ. சென்னகிருஷ்ணன், காரப்பட்டு அஞ்சல், ஊத்தங்கரை தாலுகா, கிருஷ்ணகிரி மாவட்டம்' என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.


- ஹேமாத்ரி, சென்னை.

வெள்ளி, 23 ஜூலை, 2010

சென்னையிலிருந்து அமர்நாத் சென்ற பக்தர்கள்...























அமர்நாத் பனிலிங்க தரிசனம்


ஜம்மு-காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகை கோவிலில், 2 லட்சத்து 60 ஆயிரம் யாத்ரீகர்கள் ஸ்வாமி தரிசனம் செய்துள்ளனர்.
காஷ்மீரின் தெற்கு பகுதியில், இமயமலை மீது, 3 ஆயிரத்து 888 அடி உயரத்தில் உள்ள அமர்நாத் குகை கோவிலுக்கான பனிலிங்க யாத்திரை, கடந்த 30ம் தேதி தொடங்கியது. யாத்திரை தொடங்கியது முதல் தற்போதுவரை, 2 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்துள்ளனர்.
இதுகுறித்து, அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அமர்நாத் யாத்திரை, அமைதியாகவும், எந்த பிரச்னையும் இல்லாமல் நடந்து கொண்டிருக்கிறது. குகையில் உள்ள இயற்கையான லிங்கத்தை, இன்றுவரை, 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் தரிசித்துள்ளனர். ஜம்முவில் உள்ள பஹல்காம் மற்றும் பல்தால் முகாம்களிலிருந்து, 10 ஆயிரத்து 36 பேர், தரிசனத்துக்காக புறப்பட்டு விட்டனர்.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.
இந்நிலையில், ஆயிரத்து 477 ஆண்கள், 603 பெண்கள், 54 குழந்தைகள், உள்ளிட்ட 2 ஆயிரத்து 358 பேர், கடும் குளிர் மற்றும் மழைக்கு மத்தியில், அமர்நாத் லிங்கத்தை தரிசிப்பதற்காக, ஜம்முவில் உள்ள கீழ் முகாமுக்கு பாதுகாப்புடன் புறப்பட்டுவிட்டதாக, மாநில போலீஸார் கூறியுள்ளனர்.